ஓவியம் கற்றுக்கொள்வது எப்படி?

© Ranjit

என் மேற்கு வங்க நண்பர் ஒருவருக்கு நான் வரைந்து கொடுத்த குதிரை படம்.

ஒரு குழுவோ, தனி மனிதனோ அவர்களுக்கு பிடித்த ஒரு விலங்கோடு அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு. அதை ‘totem’ என்று சொல்வார்கள்
அப்படி தனக்கும் தன் குடும்பத்திற்கும் ராசியான விலங்கு என குதிரையைச் சொன்னார் அந்த ‘வங்க’ நண்பர்.

ஒருவித அதிவேக இயக்கத்தன்மை உடையதாய் குதிரையை வரையவே நான் விரும்பினேன். ஆனால் என் நண்பரின் மனதுக்குள் இருந்ததை என்னிடம் சொன்னார். ஒரு நார்மலான ‘காலண்டர்’ வகை ஓவியம்தான் அவர் எதிர்பார்ப்பது எனப் புரிந்து கொண்டு, அது போலவே வரைந்த படம்தான் இது. மத்தபடி இந்த படத்துல பெரிசா ஒன்னும் கிடையாது.

பிடிக்கவில்லை என்றாலும், இது போல நண்பர்கள் கேட்கும் படத்தை வரைந்து கொடுப்பது உண்டு.
நான் ஒன்றும் முறைப்படி ஓவியத்தில் பயிற்சி பெற்றவன் அல்ல. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் வரையத் தொடங்கினேன். நான் வரைவதை ஏதோ ஓரளவு ‘நல்லா இருக்கு’ என்கிறார்கள். அதான் தொடர்ந்து வரைகிறேன். வேறொன்றுமில்லை.

வரையத் தெரிந்த எல்லோருக்குமே இக்கட்டான இது போன்ற சூழ்நிலை பல சமயம் வருவதுண்டு.

‘ஓ.. நீங்க வரைவீங்களா? என்னை மாதிரி அப்படியே ஒரு சின்ன ஸ்கெட்ச் போட்டு தாங்களேன்.’

‘என் லவ்வர ஒரு படம் வரைஞ்சு தர முடியுமா?’

இது போன்ற கடுப்பான கேள்விகளை சந்திக்காத ஓவியர்கள் யாராவது இருந்தால் அவர் கண்டிப்பாக போன பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருப்பார்.
எரிச்சலோடு அவர்கள் முகத்தை ஏதோ கிறுக்கிக் கொடுப்பேன். ‘நல்லா வரலையே.. ஒரு மாதிரி இருக்கு.’ என்பார்கள்.
‘சட்டியில இருந்தாதான் அகப்பையில வரும்’ என மீண்டும் கடுப்பாவேன்.

பெரும்பாலும் இது போன்ற சூழ்நிலைகளில் தப்பிப்பதற்கான அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்துவேன். பதிலுக்கு ‘பாசம்’ எனும் பிரம்மாஸ்திரத்தால் என்னை வீழ்த்தி விடுவார்கள்.

‘என் தலைவரு ‘ *** ‘யோட  படம் வரைஞ்சு தாங்க. உங்க நினைவா வச்சுக்குறேன்’னு ஒரு நண்பர் கேட்டார். ‘என் நினைவாக எவன் படத்தையோ எதுக்கு வரையனும். என்னோட படத்தை வரைஞ்சு தரேன்’னு நான் சொல்ல அவர் சமாளிக்க ஆரம்பித்தார்.

கல்லூரியில் படித்த போது இது போன்ற அனுபவங்கள் கணக்கற்றது. அம்பு குத்திய ‘இதயத்தை’ பலவிதங்களில் வரைவதில் நான் அப்போதுதான் ‘மாஸ்டர்’ ஆனேன்!!
ஹாஸ்டலில் ஒரு நண்பன்(பெயர் போட முடியாத இடத்தில் வேறு வழியில்லாமல் நண்பன் எனத்தான் போட வேண்டியிருக்கிறது).
அவன் தன் காதலிக்கு கடிதம் எழுதி முடித்ததும் லெட்டரின் முடிவில் ஒரு படம் வரைய என்னிடம் கொண்டு வருவான். ‘ஜோடிப்புறா’, ‘ஜோடிப் பூக்கள்’, ‘ovelap’ஆன இதயம் என எந்த கருமத்தையாவது வரைந்து கொடுப்பேன். இப்படி பல கடித பரிமாற்றங்கள் நடந்தது.

ஒரு நாள் அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

‘நம் காதல் நிறைவேறாது. நண்பர்களாய்ப் பிரிவோம். கண்ணீருடன்: ‘*****’ ‘ என அந்தக் கடிதம் சொல்லியது.
அக்கடிதத்தின் முடிவில் இரண்டு புறாக்கள் எதிரெதிர் திசையில் பறப்பதாக ஒரு படம் வரைந்திருந்தது.(அந்தப் பக்கமும் என்னைப் போல ஏதோ ஒரு ஜீவன் கஷ்டப்பட்டிருக்கும் போல).

அக்கடிதத்துக்கு நாலு பக்கத்தில் ஒரு பதில் கடிதம் எழுதி, படம் வரைய என்னிடம் கொண்டு வந்தான் என் நண்பன்.
அந்த லெட்டரில் ரத்தத்தால் அவன் பெயரையும் அவள் பெயரையும் எழுதியிருந்தான்.
என்னையும் ரத்தத்தால் படம் வரையச் சொல்லிவிடுவானோ எனப் பயந்தேன். நல்ல வேளை! பேனாவைக் கொடுத்தான்.
தூக்குக் கயிற்றுக்கு கீழே ஒரு புறா நிற்பதாக வரையச் சொன்னான்.
‘என்னடா இது வம்பா போச்சு’ என நினைத்து மற்ற நண்பர்களிடம் சொல்ல. எல்லோரும் ஆறுதலாக கோபமாக அட்வைஸ் கொடுத்தார்கள்.
எனக்கு அவன் எண்ணத்தின் மீது இருந்த கோபத்தை விட அவனது கற்பனை மீதுதான் அநியாயத்துக்கு கோபம் வந்தது.

இப்படித்தான் பல ‘அபா[ய]ர கற்பனை’ சக்தியுள்ளவர்களிடமிருந்து ஓவியத்தை கற்றேன்!!

Advertisements

9 thoughts on “ஓவியம் கற்றுக்கொள்வது எப்படி?

  • உண்மையான ஆர்வத்தோடு கேட்கும்போதும் அல்லது கற்பனைக்கு ‘scope’ இருக்குற ஓவியங்களையும் வரைந்து கொடுக்க எனக்கு உண்மையிலேயே விருப்பம் அதிகம். அந்த மாதிரி பல படங்களை வரைந்தும் கொடுத்துள்ளேன். உன் மேல் நம்ம்பிக்கை உள்ளது. தாராளமாய் கேட்கலாம்.

  • முதலில் போட்ட படத்தை ஞாபகத்தில் கொண்டு வர கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அநேகமாக ‘கிஸான்’ தீப்பெட்டியிலிருந்து பார்த்து வரைந்த ஏர் உழவன் என நினைக்கிறேன். அன்றைய தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து பார்த்து வரைந்த திருவள்ளுவராகவும் இருக்கலாம்.

  • தொடங்கும் போது இருப்பதுண்டு. வரைவதில் கவனம் சென்ற பின் அப்படி இருப்பதில்லை.

 1. ஓ.. நீங்க வரைவீங்களா? என்னை மாதிரி அப்படியே ஒரு சின்ன ஸ்கெட்ச் போட்டு தாங்களேன்… ithala na romba adi vaangi iruka sir… na ooviyan nu sollika yeanaku athiga aarvam undu … aanal intha ooviyathukum ooviyanukum innum sariyana angigaram kidaikalaye yea?

 2. ‘ஓ.. நீங்க வரைவீங்களா? என்னை மாதிரி அப்படியே ஒரு சின்ன ஸ்கெட்ச் போட்டு தாங்களேன்.’
  ‘என் லவ்வர ஒரு படம் வரைஞ்சு தர முடியுமா?’
  இது போன்ற கடுப்பான கேள்விகளை சந்திக்காத ஓவியர்கள் யாராவது இருந்தால் அவர் கண்டிப்பாக போன பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருப்பார்.
  //பலமுறை எனக்கு கிடைத்த அனுபவம்!//

 3. எனக்கும் இது போன்றதோர் அனுபவம் நிறைய வாய்த்ததுண்டு…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s